வெளியேற நினைத்த சாம்சாங்: தக்க வைத்த யோகி

தினமலர்  தினமலர்
வெளியேற நினைத்த சாம்சாங்: தக்க வைத்த யோகி

பிரயாக்ராஜ்: அடுத்த 6 ஆண்டுகளில் தங்களது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி டிரில்லியன் டாலராக கொண்டு வருவதே இலக்கு என உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது மாநிலத்திலிருந்து வெளியேற நினைத்த சாம்சாங் நிறுவனத்தை, தனது முயற்சியால் தக்க வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது : நான் பதவியேற்ற 15 நாட்கள் இருக்கும். நொய்டாவில் ரூ.3000 கோடியில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த சாம்சங் நிறுவனம், அந்த திட்டத்தை கைவிட்டு வேறு மாநிலத்தில் முதலீடு செய்ய இருப்பதாக ஒரு தகவல் வந்தது. இதை கேட்டு எனக்கு அதிர்ச்சியானது. உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளை அழைத்து பேசினோம். அப்போது அவர்கள் பா.ஜ., அரசு பொறுப்பேற்றதால் இந்த முடிவை எடுக்கவில்லை, அதற்கு முன்னதாக இந்த முடிவை எடுத்துவிட்டோம். இங்கு பல இன்னல்களை சந்தித்தோம் என அவர்கள் கூறினார்கள். மேலும் பிற மாநிலங்களில் கிடைத்த சலுகைகள் மற்றும் உள் கட்டமைப்புகளால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து சாம்சங் நிறுவனத்தின் தலைவரை வரவழைத்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து 15 நாட்களில் சரி செய்வதாக உறுதி அளித்தோம். அதன்படி சாம்சாங் நிறுனவத்தை, எனது முயற்சியால் உ.பி., மாநிலத்தில் தக்க வைத்தோம். உ.பி.யில் ஏற்கனவே ரூ.5000 கோடி முதலீடு செய்த சாம்சாங் நிறுவனம், மேலும் ரூ.3000 கோடி முதலீடு செய்தது. இன்றைக்கு உலகளவில் சாம்சாங் நிறுவன அலைப்பேசிக்கான உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலையாக நொய்டா அமைந்துள்ளது என்றார்.

மூலக்கதை