பிகில் வெளியீட்டுத் தேதி: தயாரிப்பாளர் வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
பிகில் வெளியீட்டுத் தேதி: தயாரிப்பாளர் வேண்டுகோள்

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் பிகில் படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி அடிக்கடி சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. படம் தீபாவளிக்கு வருவது உறுதி. அதே சமயம் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி படம் வெளிவருமா அல்லது அதற்கு முன்பாக 25ம் தேதி வெளிவருமா என யூகங்களின் அடிப்படையில் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி அது பற்றி தவறான வதந்திகளைப் பரப்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“யூகங்களின் அடிப்படையில் வெளியீட்டுத் தேதி பற்றி தவறான வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள். படத்தின் சென்சார் முடிந்த பிறகே அது பற்றி அறிவிப்போம். பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை படைக்கும் விதத்தில் சரியான நாளைத் தான் தேர்வு செய்வோம் என்பதை நம்புங்கள்” என தெரிவித்து வெளியீட்டுத் தேதி பற்றிய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் பிகில் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.பொதுவாக விஜய் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் டிரெண்ட்டிங் செய்யும் ரசிகர்கள், பிகில் படத்தின் புதிய போஸ்டரையும் வெளியான சில நிமிடங்களிலேயே டிரெண்ட்டிங்கிற்கு கொண்டு வந்தனர். இந்த புதிய போஸ்டரில் விஜய் லுங்கி அணிந்து கையில் கத்தி உடன் இருப்பது போன்று உள்ளது.

மூலக்கதை