பிறந்த நாளுக்கு இன்னும் 50 நாள் இருக்கு இவங்க அலப்பறை தாங்க முடியல...இப்போதே கோஹ்லியை கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிறந்த நாளுக்கு இன்னும் 50 நாள் இருக்கு இவங்க அலப்பறை தாங்க முடியல...இப்போதே கோஹ்லியை கொண்டாடும் ரசிகர்கள்

மும்பை: கிரிக்கெட்டின் சேஸ் மாஸ்டர், ரன் மெஷின் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, 2008 முதல் 19 வயதுக்கு உட்பட்டோர், டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான ஃபார்மெட்டுகளிலும் 50க்கும் அதிகமாக ஆவ்ரேஜ் வைத்திருக்கும் முதல் வீரர். கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை குவித்த முதல் வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார்.

2014ல் டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

அதன்பின் 2017ல் தோனி ஒருநாள், டி20 போட்டிக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து தானாக விலகினார்.

இதனால், கோஹ்லி மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டன் ஆனார். இவரது தலைமையின்கீழ் இந்திய அணி 2017 சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இறுதிப் போட்டி வரையும், நடப்பு ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டி வரையும் சென்றது.

குறிப்பாக, நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 71 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரை வென்றதுதான். இந்நிலையில், இவரது பிறந்தநாள் கொண்டாட இன்னும் 50 நாட்கள் உள்ளன.



இதைமுன்னிட்டு #AdvanceHBDKingKohli ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்தனர். 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

சிலர், ‘பிறந்த நாளுக்கு 50 நாட்கள் இருக்கும் போதே, இப்போதே உங்க அலப்பறை தாங்க முடியல’ என்றும் பதிவிட்டு கிண்டலடித்துள்ளனர்.

இதுவரை 386 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 68 சதம், 97 அரைசதம் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை