ஹாலிவுட் ஸ்டைலில் வெப் சீரிசில் நடிக்கிறார் மீனா

தினமலர்  தினமலர்
ஹாலிவுட் ஸ்டைலில் வெப் சீரிசில் நடிக்கிறார் மீனா

குழந்தை நட்சத்திரமாக இருந்து பிறகு ஹீரோயினாக மாறி தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வந்தவர் மீனா. தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மீனா வெப் சீரிஸ் ஒன்றில் ஹாலிவுட் பாணியில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார்.

கரோலின் காமாட்சி என்ற பெயரில் உருவாகி வரும் இந்த வெப் சீரிசை பாலாவின் உதவியாளர் விவேக்குமார் கண்ணன் இயக்கி வருகிறார்.

ஒரு பயங்கரமான மாபியா கும்பலை பிடிக்கும் இரண்டு அதிரடி பெண் கமாண்டோக்களின் கதை. அதில் ஒரு கமாண்டோவாக மீனாவும், இன்னொரு கமாண்டோவாக இத்தாலிய மாடல் அழகி ஜியோர்ஜியா ஆண்ட்ரியானியும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் புதுச்சேரி மற்றும் சென்னையில் நடந்துள்ளது. இது காமெடி கலந்த ஆக்ஷன் தொடர். விரைவில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மூலக்கதை