கவர்ச்சி குத்தாட்டம் போட்ட இந்துஜா

தினமலர்  தினமலர்
கவர்ச்சி குத்தாட்டம் போட்ட இந்துஜா

மேயாதமான் படத்தில் வைபவ்வின் தங்கையாக அறிமுகமானவர் இந்துஜா, ‛40 வயது மாநிறம்' பட மூலம் ஹீரோயின் ஆனார். ‛பூமராங், பில்லா பாண்டி, மகாமுனி' படங்களில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்த இந்துஜா, முதன் முதலாக ‛சூப்பர் டூப்பர்' என்ற படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருக்கிறார். ‛ஆண்மை தவறேல்' படத்தில் அறிமுகமான துருவா இதில் ஹீரோவா நடிக்கிறார். ஏ.கே.இயக்குகிறார்.

இந்துஜாவின் ஆட்டம் பற்றி இயக்குனர் ஏ.கே.கூறியதாவது: அண்மைக் காலங்களில் இந்துஜா நடித்த மேயாத மான், 40 வயது மாநிறம் ,மகாமுனி போன்ற படங்களில் குடும்பப் பாங்காக தோன்றினார். சூப்பர் டூப்பர் படத்தில் தைரியசாலி பெண்ணாக நவீன புதுமைப் பெண்ணின் அவதாரமாக வருகிறார். சுயவிருப்பமுள்ள பெண்ணாக வருகிற அவர், தன் தோற்றத்திலும், கவர்ச்சியிலும், நடிப்பிலும் தனி முகம் காட்டுகிறார். ஜில் ஜில் ராணி பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

சினிமா என்பது கலாபூர்வ வடிவம் என்பது ஒரு பக்கம். சினிமா என்பது கொண்டாட்ட வடிவம் என்பது இன்னொரு பக்கம் கவலைகள் போக்கும் கொண்டாட்டமே சினிமா என்கிற வகையில் உருவாகியிருக்கும் முழுநீள வணிகப் படம் தான் சூப்பர் டூப்பர். எனவே தான் இந்த பாடல் காட்சிக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றார்.

மூலக்கதை