'காப்பான்' - சூர்யாவை காக்குமா ?

தினமலர்  தினமலர்
காப்பான்  சூர்யாவை காக்குமா ?

'காக்க காக்க' படம் தான் சூர்யாவை ஒரு கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்திற்கு உயர்த்தி அவரைக் காத்தது. அதன் பிறகு தான் அவருடைய கமர்ஷியல் கிராப் உயர்ந்து கொண்டே வந்தது. வித்தியாசமான கதாபாத்திரங்களாகவும், கமர்ஷியல் வெற்றி தரும் படங்களாகவும் மாறி மாறி நடித்துக் கொண்டு வந்தார் சூர்யா.

ஆனால், 'அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி, 24, சி 3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே' ஆகிய படங்கள் அவருடைய கமர்ஷியல் உயர்வுக்கு இறங்கு முகத்தைத் தந்தன. இயக்குனர்களையும், கதைகளையும் நம்பி அவர் நடித்த படங்கள் தோல்வியைத்தான் பரிசாகத் தந்தன.

அவற்றை 'காப்பான்' படம் மாற்றும் என்ற நம்பிக்கையில் சூர்யா இருக்கிறார். ஒரு பரபரப்பான ஆக்ஷன், சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா என மல்டிஸ்டார் என்பதால் தென்னிந்திய அளவில் இப்படம் வெற்றிகளைக் குவிக்கும் என்று படக்குழுவும் எதிர்பார்க்கிறது.

'காக்க காக்க' படம் 2003ல் தந்த ஒரு திருப்புமுனையை 2019ல் 'காப்பான்' தந்து சூர்யாவைக் காக்கும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

மூலக்கதை