தாஜ்மகால் பார்த்த மயக்கத்தில் காஜல் அகர்வால்

தினமலர்  தினமலர்
தாஜ்மகால் பார்த்த மயக்கத்தில் காஜல் அகர்வால்

உலக அதிசயங்களில் ஒன்று, காதல் சின்னமான தாஜ்மகாலை முதன் முதலாக நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார் காஜல் அகர்வால். அந்த அனுபவத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவசத்துடன் பகிர்ந்துள்ளார்.

“தாஜ்மகாலைப் பார்த்தவுடன் நான் மெய்மறந்து, மயக்கமடைந்து, அதன் மகத்துவத்துத்தால் பிரமித்து நிற்கிறேன். அதன் வசீகரிக்கும் அழகைப் பற்றி இதுவரையில் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அதன் கட்டிடக் கலை, ஒலியியல், உட்புறங்களில் உள்ள விவரம், சமாதி அதன் வரலாறு என்னை கடந்த காலத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றது. என் மனதில் மறக்கவே முடியாத ஒரு அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

'கோமாளி' படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது தமிழில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார் காஜல்.

மூலக்கதை