பிக்பாஸ் நிழ்ச்சியில் இருந்து வெளியேறுவாரா சேரன்..?

தினமலர்  தினமலர்
பிக்பாஸ் நிழ்ச்சியில் இருந்து வெளியேறுவாரா சேரன்..?

சென்னை: டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் சேரன் ஜெயிப்பது கடினம் என்ற பேசப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வர்.

தர்ஷன், முகென், சாண்டி, கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இளைஞர்கள் என்பதால் உடல் ரீதியிலான டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் சேரன் வயதில் மூத்தவர் என்பதால் அவரால் மற்றவர்களுடன் போட்டிப்போடுவது சிரமாக இருக்கிறது.

நேற்றைய எபிசோடிலும் அவரால் திறம்பட செயல்பட முடியவில்லை. பாதியிலேயே மூச்சு வாங்கிவிட்டது அவருக்கு. இதனால் இந்த டாஸ்க்கில் சேரன் வெற்றி பெறுவது சந்தேகம் தான் என்கிறார்கள் ரசிகர்கள்.

ஒருவேளை டாஸ்க்குகளை எளிமைப்படுத்தினால் மட்டுமே அவரால் இந்த வாரம் சோபிக்க முடியும். பிக் பாஸ் ரசிகர்களை பொறுத்தவரை, வனிதாவை போல் தான் சேரனும்.ஏற்கனவே அவரை வெளியே அனுப்பிவிட்டனர். ரகசிய அறைக்கு சென்று மீண்டும் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.

எனவே வனிதா மீண்டும் நாமினேட் செய்யப்பட்ட முதல் வாரமே வெளியே அனுப்பப்பட்டது போல் சேரனும் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை