பிகில் இசை விழா: ரசிகைகளுக்கு போட்டி

தினமலர்  தினமலர்
பிகில் இசை விழா: ரசிகைகளுக்கு போட்டி

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். அப்பா, மகனாக விஜய் நடித்துள்ள இந்த படம் பெண்கள் கால்பந்தட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. அவருடன் நயன்தாரா, இந்துஜா, கதிர், யோகிபாபு என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில், சிங்கப் பெண்ணே, வெறித்தனம் பாடல்களும் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், வருகிற 19-ந்தேதி இப்படத்தின் ஆடியோ விழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பெண் ரசிகைகளுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு போட்டி வைத்துள்ளது. அதாவது, விஜய்யின் படங்களில் பிரபல வசனத்தை இணையதளத்தில் பதிவிடும் பெண் ரசிகைகளுக்கு பிகில் இசைவிழாவை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து விஜய் தனது படங்களில் பேசிய பஞ்ச் டயலாக்குகளை அவரது ரசிகர்கள் டுவிட்டரில் வேகவேகமாக பதிவிட்டு வருகின்றனர்.

மூலக்கதை