மோடி, இம்ரானை சந்திக்கிறேன்: டிரம்ப்

தினமலர்  தினமலர்
மோடி, இம்ரானை சந்திக்கிறேன்: டிரம்ப்

வாஷிங்டன்: விரைவில், பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகையில், நிருபர்களை சந்தித்த டிரம்ப் கூறுகையில், நான் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். நான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் சந்திக்க உள்ளேன். இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை குறைக்க அதிகளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


செப்., 22ம் தேதி ஹூஸ்டன் நகரில் நடக்கும் ''ஹவுடி மோடி'' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் இணைந்து டிரம்ப் பங்கேற்க உள்ளார். ஆனால், இம்ரான் கானை டிரம்ப் சந்திப்பார் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்திய பிரதமர் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஒருவர் பங்கேற்பது இது தான் முதல்முறையாகும். 2020 ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில், அமெரிக்கா வாழ் இந்தியர்களின் பங்கு ஒரளவு இருக்கும். இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக டிரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

''ஹவுடி மோடி ' நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது குறித்து இந்தியதூதர் ஹர்ஸ் வர்தன் சிறிங்களா கூறுகையில், டிரம்ப் பங்கேற்பது வரலாற்றுப்பூர்வமானது. எதிர்பாராதது. இது இரண்டு வளர்ந்த நாடுகளுக்கு இடையிலான பிரிக்க முடியாத, வலிமையான நட்புறவையும், ஒத்துழைப்பையும் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை