சீனாவின் உதவியுடன் 2022ல் முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்

தினகரன்  தினகரன்
சீனாவின் உதவியுடன் 2022ல் முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்

இஸ்லாமாபாத்: சீனா உதவியுடன் 2022ம் ஆண்டில் தனது முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவோம் என்று பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் முதல் முறையாக விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலில் 50 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் இந்த பட்டியல் 2022ல் 25 ஆக குறைக்கப்படும். இவர்களில் ஒருவர் விண்வெளிக்கு அனுப்பப்படுவார். பாகிஸ்தான் விமானப் படை, விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஆட்கள் தேர்வில் முக்கிய பங்காற்றும். பாகிஸ்தான் விண்வெளி அறிவியல் கல்வி மையமானது நாட்டில் விண்வெளி அறிவியலை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை