ரசலை பதம் பார்த்த ‘பவுன்சர்’ | செப்டம்பர் 13, 2019

தினமலர்  தினமலர்
ரசலை பதம் பார்த்த ‘பவுன்சர்’ | செப்டம்பர் 13, 2019

கிங்ஸ்டன்: சி.பி.எல்., தொடரில் வில்ஜோயன் வீசிய பவுன்சர் தாக்கியதில் நிலை குலைந்து சரிந்து விழுந்தார் ஆன்ட்ரூ ரசல். 

விண்டீஸ் அணியின் ‘ஆல் ரவுண்டர்’ ஆன்ட்ரூ ரசல் 31. அங்கு நடக்கும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் கெய்ல் கேப்டனாக உள்ள ஜமைக்கா அணிக்காக விளையாடுகிறார். இதில், ஜமைக்கா அணி (170/5), 5 விக்கெட்டில் செயின்ட் லுாசியா அணியிடம் (171/5) வீழ்ந்தது.

இப்போட்டியின் போது 14வது ஓவரை வில்ஜோயன் வீசினார். பவுன்சராக வந்த 5வது பந்து, ரசல் வலது பக்க காதுக்கு அருகில், ‘ஹெல்மெட்’ மீது பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்த ரசல், அப்படியே மைதானத்தில் சுருண்டு விழுந்தார். 

எழுந்து நிற்க முயன்றும் முடியவில்லை. உடனடியாக கழுத்தில் பாதுகாப்பு கவசம் அணியப்பட்டு, ‘ஸ்டிரெச்சரில்’ வெளியேறினார் ரசல். பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவருக்கு ‘ஸ்கேன்’ செய்யப்பட்டது. நல்லவேளையாக காயம் பெரியளவு இல்லை என்பதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். 

சமீபத்தில் ஆஷஸ் தொடரில், ஆர்ச்சர் வீசிய பவுன்சர், ஸ்மித் (ஆஸி.,) கழுத்துப் பகுதியில் தாக்கியது. தற்போது ரசலுக்கும் பவுன்சர் தாக்கியது சோகம் தான். 

மூலக்கதை