வீட்டின் மீது விழுந்த விமானம்

தினமலர்  தினமலர்
வீட்டின் மீது விழுந்த விமானம்

லொப்ஸ்: கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

அந் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பொபையன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 9 பயணிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று, லொப்ஸ் நகருக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், சிறுவன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை