பாலியல் புகாரில் சிக்கிய சின்மயானந்த்திற்கு உடல்நலக்குறைவு

தினமலர்  தினமலர்
பாலியல் புகாரில் சிக்கிய சின்மயானந்த்திற்கு உடல்நலக்குறைவு

ஷாஜகான்புர் : பாலியல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தர பிரதேச மாநிலம் பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், சின்மயானந்த், பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர் மீது, சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் புகார் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, அந்த மாணவி தன்னுடைய தரப்பை தெரிவித்திருந்தார். இந்தப் புகார் குறித்து, சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


முன்னதாக, ஷாஜகான்புரில் உள்ள நீதிமன்றத்தில், பலத்த பாதுகாப்புடன், அந்த மாணவி, நேற்று ஆஜரானார். ஐந்து மணி நேரம், வாக்குமூலம் அளித்துள்ளார். அது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டதையடுத்து டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மூலக்கதை