ஜம்மு காஷ்மீரை இந்தியாவுக்குள் ஒருங்கிணைக்க இதுதான் சரியான நேரம்: பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் பேட்டி

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரை இந்தியாவுக்குள் ஒருங்கிணைக்க இதுதான் சரியான நேரம்: பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் பேட்டி

லண்டன்: ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் வலியுறுத்தியுள்ளார். பிரிட்டனில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் சார்பில் தியாகிகள் தினம் குறித்து நடந்த  நிகழ்ச்சியில் பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. பாப் பிளாக்மேன் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி  இந்தியா ரத்து செய்து, சட்டப்பிரிவு 370-ஐ திரும்பப் பெற்றது. இந்த முடிவை பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்ப திட்டமிட்டுள்ளது.ஆனால், ஜம்மு காஷ்மீர் முழுதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. ஐ.நாவில் பாகிஸ்தான் தீர்மானம் கொண்டுவந்தால் அதை உறுப்பு நாடுகள் நிச்சயம் தோற்கடிக்க வேண்டும். காஷ்மீரில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினர் வெளியேற  வேண்டும் என்றார். பிரதமர் மோடியின் அரசு, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவை நீக்கியதை நான் ஆதரிக்கிறேன். பாஜக வலிமையான தலைவர்களை கொண்டுள்ளதை உணர்த்துகிறது. ஜம்மு காஷ்மீரை  முறைப்படி இந்தியாவுக்குள் ஒருங்கிணைக்க இதுதான் சரியான நேரம் என்றார். ஜம்மு காஷ்மீர் குறித்து எதிர்மறையான கருத்துக்களை இங்கிலாந்து எம்.பி.க்கள் தெரிவிப்பது எனக்கு கவலை அளித்திருக்கிறது. இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான்  ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவருவதற்கு முன், அந்நாடு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். ஜம்மு காஷ்மீர் இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என்றும் தெரிவித்தார்.

மூலக்கதை