ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாளையொட்டி மகன் கார்த்திக் சிதம்பரம் தந்தைக்கு வாழ்த்து கடிதம்

தினகரன்  தினகரன்
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாளையொட்டி மகன் கார்த்திக் சிதம்பரம் தந்தைக்கு வாழ்த்து கடிதம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாளையொட்டி மகன் கார்த்திக் சிதம்பரம் தந்தைக்கு வாழ்த்து கூறி 2 பக்க கடிதம் எழுதியுள்ளார். முதல் முறையாக திகார் சிறையில் தனது பிறந்தநாளை கழிக்க இருக்கும் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் வீட்டில் இருப்பவர்கள் மிகுந்த வேதனை அடைந்திருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், 74 வயதான தங்களை எந்தவொரு 56லும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதன் மூலம்  புல்வாமா தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ள மோடி 56 இஞ்ச் மார்பகம் கொண்டவர் என்று நிருப்பித்துள்ளதாக அமித்ஷா பேசியிருந்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கடிதத்தில் நாட்டின் பொருளாதாரம் நிலை குறித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் ஆகியோர் குறிப்பிட்டிருந்த கருத்துகள், மோடி அரசின் நூறு நாள் கொண்டாட்டம், காஷ்மீர் விவகாரம், சந்திராயன்-2 குறித்தும்  எழுதியுள்ளார். இது மட்டுமின்றி பிரிட்டன், சீனா மற்றும் பாகிஸ்தானின் அரசியல் நிலவரத்துடன் அண்மையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள் குறித்தும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக அரசியல் நாடகத்திற்கு எதிராக போராடி உண்மையின் துணையுடன் தாம் வெளிவருவீர்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை