தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதியை மத்திய அரசு ரத்து செய்திருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதியை மத்திய அரசு ரத்து செய்திருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது

தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதியை மத்திய அரசு ரத்து செய்திருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கடந்த 2006 ஆம் ஆண்டு "பின் தங்கிய பகுதிகள் வளர்ச்சி நிதி" என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணமலை, நாகை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் கல்வி, சுகாதாரம், அங்கன்வாடி மையங்கள், சாலை உள்ளிட்ட வசதிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் 14 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு இந்த திட்டதை ரத்து செய்திருப்பது மக்கள் விரோத செயல் என சாடியுள்ளார். இந்த முடிவைக் கைவிட்டு மாவட்டங்களுக்கான சிறப்பு நிதியை உயர்த்தி வழங்கிடவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை