ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பட்டியல் : முதல்வர்

தினமலர்  தினமலர்
ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பட்டியல் : முதல்வர்

சண்டிகர்: ஹரியானா மாநிலத்திலும் விரைவில் தேசிய குடிமக்கள் பட்டியில் அமல்படுத்தப்படும் என முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறிவர்களை கண்டுபிடிப்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. இதில் 19லட்சம் பேர் தேசிய குடிமாக்கள் பதிவேட்டில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.


ஹரியானா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலாவில்முன்னாள் கப்பல்படை தளபதி சுனில் லன்பா மற்றும் ஓய்வு பெற் ஐகோர்ட் நீதிபதி பல்லா ஆகியோரை முதல்வர் கட்டார் சந்தித்து பேசினார். ஹரியானா மாநிலத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பபடும் என மனோகர் லால் கட்டார் தெரிவித்து உள்ளார். இருப்பினும் இதனை எப்போது , எப்படி அமல்படுத்தபடும் என்று விரிவாக கூறவில்லை. இதே கருத்தை காங்கிரஸ் தலைவர் பூபேந்தர்சிங் ஹூடாவும் ஆதரித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஹரியானாவில் தேசிய மக்கள் குறித்த கணக்கெடுப்பு வெற்றியை எளிதாக பெற்று தரும் என பா.ஜ.,வும், காங்கிரசும் கருதுகிறது.
முன்னதாக அசாம் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குறித்து தேசிய குடிமக்கள் குறித்து பட்டியில் தயாரிக்கப்படும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மூலக்கதை