இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு

தினமலர்  தினமலர்
இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு

ஜூலியட் : அமெரிக்காவில் இறந்த டாக்டர் ஒருவரது வீட்டில், 2,000க்கும் அதிகமான, இறந்த நிலையிலான சிசுக்கள் இருந்தது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பிறப்பதற்கு முந்தைய நிலையில், தாயின் வயிற்றில் உள்ள குழந்தை, சிசு என்று அழைக்கப் படுகிறது. அமெரிக்காவின், இல்லினாயிஸ் மாகாணம், வில் கவுன்டி பகுதியை சேர்ந்தவர், உல்ரிச் கிளோப்பர். டாக்டரான, இவர், கருக்கலைப்பு மருத்துவத்தில் நிபுணர். இவர், நடத்தி வந்த கருக்கலைப்பு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு வந்த உரிமம், 2015ல் ரத்து செய்யப்பட்டது. இதைஅடுத்து, அந்த மருத்துவமனை மூடப்பட்டது.

இந்நிலையில், கடந்த, 3ம் தேதி, கிளோப்பர் இறந்தார். இரண்டு நாட்களுக்கு முன், கிளோப்பர் வீட்டில், ஒரு அறையில், 2,000க்கும் அதிகமான, சிசுக்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, வில் கவுன்டி ஷெரீப் அலுவலகத்துக்கு, அவரது குடும்ப வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, போலீசாரும், டாக்டர்களும், கிளோப்பர் வீட்டுக்கு சென்றனர். அங்கு, 2,246 சிசுக்கள், பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளதை கண்டுபிடித்தனர். இது பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை