ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு: தேடும் பணி தீவிரம்

தினகரன்  தினகரன்
ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு: தேடும் பணி தீவிரம்

ஆந்திரா மாநிலம்: கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தேவி பட்டினம் என்ற பகுதியில் உள்ள சுற்றுலா தளங்கள் உள்ளது. இதில் ஹைட்ரபாத், வரங்கல் மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த  சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். சுற்றுப்பயணத்தின் போது ப்ரொஸிஸ்டர் என்னும் தனியார் படகில் 64 சுற்றுலா பயணிகளும் மற்றும் 9 ஊழியர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படகு தேவிப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு அங்கிருந்து ஒரு கோவிலுக்கு சென்று,பிறகு அந்த பகுதியில் இருந்து கோதாவரி ஆற்றின் இயற்கை வளங்களை ரசிக்கும் வகையில் பாப்பிக்கொண்டார் சுற்றுலா வளங்களிடம் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது கச்சலூர் என்ற இடத்தில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட நீர் சுழற்சி காரணமாக படகின் ஒருபக்கம் சரிந்ததாகவும் , படகு சரிந்த  நேரத்தின் அனைவரும் ஒருபுறமாக வந்து நின்றதன் காரணமாக படகு விபத்துள்ளானது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதனிடையே படகில் உயிர்கவசம் அணிந்திருந்த 14 பேர் மட்டும் உடனடியாக ஆற்றில் குதித்தனர். நீரில் குதித்தவர்களை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த துண்டிக்கூட்டம் என்ற மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து 27 பேரை பத்திரமாக மீட்டனர். மீதம் உள்ளவர்கள் குறித்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் படைக்கு சொந்தமான தேசிய பேரிடர் மாநில பேரிடர் வீரர்கள் 140 பேரை கொண்டு தேடுதல் பணி நடைபெற்று வந்தது. நேற்று இரவு என்பதன் காரணமாக தேடுதல் பணி இடையூறாக காணப்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் தற்போது தேசிய மீட்பு படையினர் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 27 பேரை மீட்கப்பட்டுள்ள நிலையில் 8 பேரை சடலமாக மேலே எடுத்து வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விபத்து நடந்த இடத்தை ஹெலிகாப்டர் மூலமாக நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். விபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த நிலையில், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ருபாய் அறிவித்துள்ளார். மேலும் கோதாவரி ஆற்றில் தற்காலிகமாக எந்த படகு பயணமும் இருக்கக்கூடாது என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கு காரணமான இந்த படகு காக்கிநாடா துறைமுகத்தில் இந்த ஆண்டு நவம்பர் வரை தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோதாவரி ஆற்றில் படகு போக்குவரத்து நடத்த வேண்டும் என்றால் ஆந்திர மாநிலம் மேல் பாசனத்துறை மற்றும் சுற்றுலாத்துறையின் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த அனுமதியை படகு உரிமையாளர் பெற என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த வெங்கட்ரமணா என்பவருக்கு  சொந்தமான இந்த படகு என்பதால் அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எதற்காக அனுமதி இல்லாமல் சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றியது என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தற்போதும் நடைபெற்று வருகிறது.

மூலக்கதை