மோடி கூட்டம்: டிரம்ப் பங்கேற்பு?

தினமலர்  தினமலர்
மோடி கூட்டம்: டிரம்ப் பங்கேற்பு?

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி, வரும் 22ல் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள, ஹூஸ்டன் நகரில், அவர் உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் 50 ஆயிரம் பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், மோடியுடன் இணைந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் மேடை ஏறுவார் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்க எம்.பி.,க்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், இந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்பது, அவரது ஆதரவை மோடிக்கு அளிக்கும் வகையில், சமிஞ்சைகள் வெளிப்படுத்தும் எனக்கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்க பயணத்தில், அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு நியூயார்க் நகரம் அல்லது வாஷிங்டன்னில் நடக்கலாம் என தெரிகிறது. வரும் 28 ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

மூலக்கதை