பாலிசிதாரர்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
பாலிசிதாரர்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எச்சரிக்கை

அதிக பாலிசி பலன்­களை அளிப்­ப­தாக தொலை­பேசி மூலம் ஆசை காட்டி ஏமாற்­றும் நபர்­களிடம் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும்­படி, இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்­றும் மேம்­பாட்டு ஆணை­ய­மான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எச்­ச­ரிக்கை செய்­துள்­ளது.



காப்­பீடு ஒழுங்­கு­முறை அமைப்பு அல்­லது தொடர்­பு­டைய மற்ற கட்­டுப்­பாட்டு அமைப்­பு­க­ளைச்­ சேர்ந்த அதி­கா­ரி­கள் என்று சொல்­லி ஒரு சிலர் பொது­மக்­களை தொடர்பு கொண்டு, அதிக பாலிசி பலன் அளிக்­கும் சலுகை பற்றி கூறி வரு­வ­தாக புகார்­கள் வரு­கின்­றன என, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அமைப்பு தெரி­வித்­துள்­ளது.



எனி­னும், இந்த அழைப்­பு­கள் போலி­யா­னவை என்­றும், தங்­கள் அமைப்பு நேர­டி­யாக யாரை­யும் தொடர்பு கொள்­வ­தில்லை என்­றும், இது தொடர்­பாக பாலி­சி­தா­ரர்­கள் மற்­றும் பொது­மக்­கள் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என்­றும், ஆணை­யம் எச்­ச­ரித்­துள்­ளது.தொலை­பேசி அழைப்பு மூலம் தெரி­விக்­கப்­படும் மோசடி சலு­கை­கள் குறித்து எச்­ச­ரிக்கை தேவை என்­றும், தொலை­பேசி உரை­யா­டல் தொடர்­பான தக­வல்­களை, அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அலு­வ­ல­கம் அல்­லது கால்­ சென்­டர்­களில் உள்­ள­வர்­களை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்­டும் என்­றும் தெரி­வித்­துள்­ளது.



இத்­த­கைய மோசடி அழைப்­பு­க­ளால் ஏமா­றா­மல் இருக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டுள்ள
ஆணை­யம், இத்­த­கைய அழைப்­பு­கள் வந்­தால் காவல் நிலை­யத்­தில் புகார் தெரி­விக்­கு­மா­றும் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

மூலக்கதை