பட்­ஜெட் போடு­வ­தில் தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்

தினமலர்  தினமலர்
பட்­ஜெட் போடு­வ­தில் தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்

சிறந்த முறை­யில் பட்­ஜெட் போடு­வது என்­பது வேறு; அதை நடை­மு­றை­யில் வெற்­றி­க­ர­மாக பின்­பற்­று­வது என்­பது வேறு. பட்ஜெட் போட்டு செலவு செய்­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்­த­வர்­கள் கூட, அதை கடைப்­பி­டிப்­ப­தில் கோட்டை விட்­டு­வி­ட­லாம். இவ்­வாறு பட்ஜெட்டை கடைப்­பி­டிக்­கா­மல் கைவிட கார­ண­மாக, சில பொது­வான தவ­று­கள் அமை­கின்­றன. அவற்றை தவிர்க்­கும் வழி­கள்:


சின்ன சின்ன செல­வு­கள்:



பட்­ஜெட் போடும் போது பெரிய செல­வு­களில் கவ­னம் செலுத்தி, சின்ன செல­வு­களை மறந்­து­வி­ட­லாம். உதா­ர­ண­மாக, காபி, டீக்­கான விலை குறை­வாக இருக்­க­லாம். ஆனால், அதுவே தின­சரி பழக்­க­மாக இருந்­தால், மொத்­தத்தில் கணி­ச­மான தொகை­யா­கும். இதை கணக்­கில் எடுத்­துக்­கொள்ளாமல் விட்­டால், பட்­ஜெட்­டில் துண்டு விழும்.



பெருமை செல­வு­கள்:



பல­ருக்­கும் அடுத்­த­வர்­களை பார்த்து அவர்­க­ளைப்­போல இருக்க வேண்­டும் என்­ப­தற்­கான
பொருட்­களை வாங்­கும் பழக்­கம் இருக்­கிறது. இப்­படி அந்­தஸ்­திற்­காக செலவு செய்­யும் பழக்­கம், நிச்­ச­யம் பட்­ஜெட்டை பதம் பார்க்­கும். உங்­கள் தேவை­க­ளுக்கு ஏற்­பவே செல­வு­கள் அமைய வேண்­டும்.



குடும்ப ஒத்­து­ழைப்பு:



கிரிக்­கெட் விளை­யாட்­டில், ஒரு அணி­யாக விளை­யா­டு­வது எவ்­வ­ளவு முக்­கி­யமோ அதே போல பட்­ஜெட்­டி­லும் குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் ஒத்­து­ழைப்பு அவ­சி­யம். குறிப்­பாக கண­வன், மனைவி இரு­வ­ரும் பட்­ஜெட்டை கடைப்­பி­டிப்­பது முக்­கி­யம். இல்லை எனில் செல­வு­களை
கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.



அதிக சிக்­க­னம்:




நல்ல பட்­ஜெட் என்­பது, சிக்­க­ன­மா­ன­தாக மட்­டும் இருக்க கூடாது. அனைத்து வகை செல­வு­க­ளுக்­கும் இடம் அளிக்க வேண்­டும். வெறும் கட்­டுப்­பா­டு­களை மட்­டுமே கொண்ட பட்­ஜெட்டை வெற்­றி­க­ர­மாக கடைப்­பி­டிப்­பது கடி­னம். எனவே, ஓர­ளவு தாராள செல­வுக்கு வாய்ப்­ப­ளிக்­கும் வகை­யில் பட்­ஜெட் அமைய வேண்­டும்.




அவ­சர கால நிதி:




பட்­ஜெட் போடும் போது, எதிர்­பா­ராத செலவுகளை சமா­ளிப்­ப­தற்­கான அவ­சர கால நிதி கையில் இருப்­பதை உறுதி செய்து கொள்ள வேண்­டும். இல்லை எனில், எதிர்­பா­ராத நெருக்­க­டி­கள், பட்­ஜெட்டை பாதிக்­கும். குடும்ப தேவை­க­ளுக்கு ஈடு கொடுப்­பதே சிறந்த பட்­ஜெட். தேவை­யான மாற்­றங்­களை செய்ய வழி இருக்க வேண்­டும்.

மூலக்கதை