நிதித் துறை செயலருடன் வங்கி தலைவர்கள் சந்திப்பு

தினமலர்  தினமலர்
நிதித் துறை செயலருடன் வங்கி தலைவர்கள் சந்திப்பு

புதுடில்லி:பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை, நிதித்துறை செயலர், ராஜிவ் குமார், 19ம் தேதியன்று சந்திக்கிறார்.



இந்த சந்திப்பின்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவுவதற்காக, பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பை அடுத்து, வங்கிகளின் வட்டிவிகிதங்கள் குறித்தும் பேசப்படும் என தெரிகிறது.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாகவும், இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.



மேலும், இந்த சந்திப்பின் போது, வட்டி குறைப்பு, கடன் வழங்கலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் அலசப்படும் என தெரிகிறது.மேலும், ரிசர்வ் வங்கியின், ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட புதிய கடன்களை அறிமுகம் செய்து, புதிதாக கடன் வாங்குபவர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.

மூலக்கதை