நிதியமைச்சர் கருத்து: நிதின்கட்கரி விளக்கம்

தினமலர்  தினமலர்
நிதியமைச்சர் கருத்து: நிதின்கட்கரி விளக்கம்

புதுடில்லி: மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் பின்னடைவு ஏற்பட்டதற்கு ஓலா, உபேர் போன்ற வாடகைக் கார்களை அதிகம் பேர் பயன்படுத்த துவங்கியதும் ஒரு காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதற்கு சமூகவலை தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியது, மோட்டார் வாகன உற்பத்தித்துறையில் பின்னடைவுக்கான பல்வேறு காரணங்களில் ஓலா, உபேரும் ஒரு காரணம் என்று தான் கூறினார். அவரது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.


மோட்டார் வாகன உற்பத்தித் துறையை மேம்படுத்த அவற்றுக்கான ஜி.எஸ்.டி. வரியை 10 சதவீதம் குறைக்க தொழிற்துறையினர் கோருகின்றனர். அது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கையில் இருக்கிறது.. இது தொடர்பாக நிதியமைச்சருடன் ஆலோசித்தேன் என்றார்.


மூலக்கதை