'பிரிட்டன் பார்லிமென்ட் முடக்கம் சட்ட விரோதம்'

தினமலர்  தினமலர்

லண்டன் : 'பிரிட்டன் பார்லிமென்டை, பிரதமர், போரீஸ் ஜான்சன் முடக்கியுள்ளது, சட்ட விரோதம்' என, ஸ்காட்லாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. ராஜினாமாஅதற்கு, 'பிரெக்சிட்' என்னும் மசோதாவை தாக்கல் செய்து, பார்லிமென்டின் ஒப்புதலை பெற, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அப்போதைய பிரதமர், தெரசா மே அரசு தோல்வியடைந்தது. இதையடுத்து, தெரசா மே, கடந்த ஜூன் மாதம், பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

தற்போது புதிய பிரதமராக, போரிஸ் ஜான்சன் உள்ளார். இந்நிலையில், பிரெக்சிட் விவகாரத்தில், போரிஸ் ஜான்சன் அரசுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளதால், அதுவரை பிரிட்டன் பார்லிமென்டை முடக்கி வைக்க ஒப்புதல் அளிக்கக் கோரி, ராணி, இரண்டாம் எலிசபெத்திடம் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, வரும், அக். 14-ம் தேதி வரை, பார்லி.,யை முடக்கிவைக்க, ராணி, இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.மனு தாக்கல்இந்நிலையில், பார்லி.,யை முடக்கும், பிரதமர் போரிஸ் ஜான்சனின் முடிவை எதிர்த்து, ஸ்காட்லாந்து நீதிமன்றத்தில், 70க்கும் அதிகமான எம்.பி.,க்கள், மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'ஐரோப்பிய யூனியனிலிருந்து, பிரிட்டன் விலக, இரண்டுமாதம் கூட இல்லாத நிலையில், பார்லி.,யை, பிரதமர், ஜான்சன் முடக்கியது சட்ட விரோதம். 'எனினும், இது பற்றி, பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தான், இறுதி முடிவெடுக்க வேண்டும்' என, கூறியது.

மூலக்கதை