பிரிட்டனில், 'விசா' சலுகை இந்திய மாணவர்கள் மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்

லண்டன் : 'பிரிட்டனில் கல்வி பயிலும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும், தங்கள் படிப்பு முடிந்த பின், இரண்டு ஆண்டுகள் பணியில் ஈடுபட, 'விசா' வழங்கப்படும்' என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பு முடிந்து பட்டம் பெற்றதும், இரண்டு ஆண்டுகள் பணியில் ஈடுபட, பணி விசா வழங்கப்பட்டு வந்தது. கடந்த, 2012ல், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற தெரசா மே, அந்த நடைமுறையை ரத்து செய்து, நான்கு மாதங்களுக்கு மட்டுமே பணி விசா வழங்கப்படும் என, அறிவித்தார். இதனால், பிரிட்டனில் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக, சமீபத்தில் பொறுப்பேற்ற, போரிஸ் ஜான்சன், இது குறித்து ஆய்வு செய்து, அதில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

'அடுத்த ஆண்டு முதல், கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, பட்டம் பெற்றதும், முன்பு போல், இரண்டு ஆண்டுகள் பணி விசா வழங்கப்படும்' என, பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு, பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. பிரிட்டனில் பயிலும் இந்திய மாணவர்களும், பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

மூலக்கதை