1 லிட்டர் பால் ரூ.140 பாக்.,கில் தான் இந்த அவலம்

தினமலர்  தினமலர்

கராச்சி : அண்டை நாடான, பாகிஸ்தானில், 1 லிட்டர் பாலின் விலை, 140 ரூபாயை எட்டியுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாகிஸ்தானில், சமீபத்தில் மொகரம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, கராச்சி மற்றும் சிந்து பகுதிகளில், பாலின் தேவை கடுமையாக அதிகரித்ததையடுத்து, அதன் விலையும் அதிகரித்தது. கராச்சியிலும், சிந்துவிலும், 1 லிட்டர் பால், 140 ரூபாய் வரை விற்கப்பட்டது; இது, பெட்ரோலின் விலையை விட அதிகம். பாகிஸ்தானில், 1 லிட்டர் பெட்ரோல், 113 ரூபாய்க்கும்; டீசல், 91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பால் விலை அதிகரித்தது குறித்து, கராச்சி நகர ஆணையர், இப்திகர் சல்வானி கூறியதாவது:கராச்சியில், 1 லிட்டர் பாலின் விலை, அதிகபட்சமாக, 94 ரூபாய்க்கு விற்கலாம் என, நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதன் தேவை திடீரென அதிகரித்ததால், அதன் விலையும் அதிகரித்து விட்டது. அதை கட்டுப்படுத்த, உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

மூலக்கதை