இந்திய பொருளாதாரமும் ஹிந்தி திரைப்படங்களும்

தினமலர்  தினமலர்
இந்திய பொருளாதாரமும் ஹிந்தி திரைப்படங்களும்

புதுடில்லி:‘இந்திய பொருளாதாரம் ஹிந்தி படங்களை போன்றது; இறுதியில் சந்தோஷமாகவே முடியும்’ என்று, உதய் கோட்டக் கூறியுள்ளார்.


கோட்டக் மகிந்திரா வங்கியின் தலைவர், உதய் கோட்டக், இந்திய பொருளாதாரத்தையும், ஹிந்தி படங்களையும் ஒப்பிட்டு, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:இந்தியாவின் பொருளாதாரமும், ஹிந்தி படங்கள் போன்றது தான். ஹிந்திப் படங்களில் ஹீரோவும், வில்லனும் மோதிக் கொண்டிருந்தாலும், எப்போதும் இறுதி முடிவு சந்தோஷமாகவே இருக்கும். அது போலத் தான் இந்திய பொருளாதார விஷயமும்.நாட்டின் பொருளாதார நிலை, தற்சமயம் மிகவும் சவாலானதாக தோன்றுகிறது. ஆனால், அது இப்போது காட்சியளிப்பது போல, ஒருபோதும் அவ்வளவு மோசமானதாக இருந்தது இல்லை. அதேசமயம், இப்போது நன்றாக காட்சியளிப்பது போல, ஒருபோதும் நன்றாக இருந்தது இல்லை.நாட்டின் வளர்ச்சியானது, ஒரு பாலிவுட் கதையில் வரும் காதல் போன்றது. வளர்ச்சி எனும் காதல் வளரும்போது, இடையே மந்த நிலை எனும் வில்லன் வருகிறார்.இந்த வில்லனை முறியடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். காலப்போக்கில் விஷயங்கள் சரியாகி, முடிவு சந்தோஷமாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை