தேறுவாரா லோகேஷ் ராகுல் * இன்று இந்திய அணி தேர்வு | செப்டம்பர் 11, 2019

தினமலர்  தினமலர்
தேறுவாரா லோகேஷ் ராகுல் * இன்று இந்திய அணி தேர்வு | செப்டம்பர் 11, 2019

மும்பை: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. லோகேஷ் ராகுலுக்கு கல்தா கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ‘டுவென்டி–20’, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வரும் 15ம் தேதி முதல் ‘டுவென்டி–20’ போட்டி, தரம்சாலாவில் நடக்கவுள்ளது. 

டெஸ்ட் தொடர் வரும் அக்., 2ல் துவங்குகிறது. முதல் டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்க உள்ளது. அடுத்து ராஞ்சி (அக். 10–14), புனேயில் (அக். 19–23) நடக்கும். இதற்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது. 

துவக்க வீரர் லோகேஷ் ராகுல், கடந்த 30 டெஸ்ட் இன்னிங்சில் 664 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்த மயங்க் அகர்வாலும், விண்டீஸ் தொடரில் ஏமாற்றினர். அடுத்து ‘மிடில் ஆர்டரில்’ புஜாரா, கேப்டன் கோஹ்லி, 5, 6 வது இடங்களில் வந்த ரகானே, ஹனுமா விஹாரி வழக்கம் போல இடம் பெறுவர்.

இதனால் டெஸ்டில் ரோகித் சர்மாவை, பேட்டிங்கில் சொதப்பும் ராகுலுக்குப் பதில் மயங்க் அகர்வாலுடன் சேர்த்து துவக்கத்தில் களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ராகுல் நீக்கப்படுவார் எனத் தெரிகிறது. 

இவரது இடத்தில் பெங்கால் வீரர் அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பன்சால், சுப்மன் கில் என பலரும் மூன்றாவது துவக்க வீரர் இடத்துக்கு போட்டியில் உள்ளனர். விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட், சகா தேர்வாகலாம். ‘பிட்னஸ்’ இல்லாத புவனேஷ்வர் குமாருக்குப் பதில் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்படுவாரா என இன்று தெரியும்.

பவுலிங் எப்படி

பவுலிங்கை பொறுத்தவரையில் ‘வேகத்தில்’ பும்ரா, இஷாந்த் சர்மா, ‘சுழலில்’ அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவர். ஒருவேளை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு தரப்பட்டால் உமேஷ் யாதவ் அணிக்கு வருவார். 

 

மூன்று ‘டுவென்டி–20’

தேதி       போட்டி இடம்

செப். 15 முதல் தரம்சாலா

செப். 18 2வது மொகாலி

செப். 22 3வது பெங்களூரு

* போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு துவங்கும்

 

டெஸ்ட் எங்கே 

தேதி       டெஸ்ட்       இடம்

அக். 2–6 முதல் விசாகப்பட்டனம்

அக். 9–13 2வது ராஞ்சி

அக். 19–23 3வது புனே

* போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு துவங்கும்.

மூலக்கதை