அஷ்வின் அபாரம் * கவுன்டியில் கலக்கல் | செப்டம்பர் 11, 2019

தினமலர்  தினமலர்
அஷ்வின் அபாரம் * கவுன்டியில் கலக்கல் | செப்டம்பர் 11, 2019

நாட்டிங்காம்: கென்ட் அணிக்கு எதிரான கவுன்டி போட்டியில் அஷ்வின் நான்கு விக்கெட் சாய்த்து அசத்தினார்.

இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் நாட்டிங்காம்சயர் அணிக்காக இந்திய வீரர் அஷ்வின் பங்கேற்கிறார். ‘டாஸ்’ வென்று களமிறங்கிய கென்ட் அணிக்கு அஷ்வின் பெரும் தொல்லை கொடுத்தார். இவரது சுழலில் பெல் (45), கேப்டன் பில்லிங்ஸ் (4), காக்ஸ் (22), ராபின்சன் (6) சிக்கினர். கென்ட் அணி முதல் இன்னிங்சில் 304 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அஷ்வின் 4 விக்கெட் சாய்த்தார்.

நாட்டிங்காம்சயர் அணி முதல் இன்னிங்சில் 124 ரன்னுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய கென்ட் அணி இரண்டாவது நாள் ஆட்டம் முடிவதற்கு முன் இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 95 ரன் எடுத்து 275 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

மூலக்கதை