விவசாய ஓய்வூதிய திட்டம்; இன்று துவக்குகிறார் மோடி

தினமலர்  தினமலர்
விவசாய ஓய்வூதிய திட்டம்; இன்று துவக்குகிறார் மோடி

புதுடில்லி: இன்று(செப்.,12) துவக்கப்பட உள்ள பிரதமரின் விவசாய ஓய்வூதிய திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 30 ஆயிரம் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


நாட்டில் 60 வயதை தாண்டிய விவசாயிகளுக்கு மாதம் தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கு பிரதமரின் விவசாய ஓய்வூதியம் திட்டம் என பெயரிடப்பட்டு உள்ளது. திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையுள்ள சிறு குறு விவசாயிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மாதந்தோறும் 55 முதல் 200 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் 60 வயதை கடந்ததும் ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தமிழகத்தை சேர்ந்த 30 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 10.15 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு இத்திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை பிரதமர் வழங்க உள்ளார். தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்க்க வேளாண்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை