ஓணம்: அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
ஓணம்: அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சி

உடுமலை:உடுமலை பகுதிகளில், ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.கேரளா மக்களால், ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தி, ஆவணி மாதம் திருவோணம் நாளில், மக்களை காண வரும் மன்னரை வரவேற்கும் வகையில், ஓணத்தை கொண்டாடுகின்றனர்.உடுமலையிலுள்ள, கேரளா மக்கள், வீடுகளின் முன்பு, பல்வேறு வண்ணப்பூக்களை கொண்டு, அத்தப்பூ கோலம் வரைந்தும், புத்தாடைகள் அணிந்தும், உறவினர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியும் மகிழ்ந்தனர்.

மூலக்கதை