இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்
இங்கிலாந்துஆஸ்திரேலியா மோதும் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து  ஆஸ்திரேலியா மோதும் 5வது மற்றும் கடைசி போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. பாரம்பரியமிக்க இந்த தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை பெற்றதுடன் ஆஷஸ் குடுவையையும் தக்கவைத்துக் கொண்டது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 3 போட்டியில், 5 இன்னிங்சில் 671 ரன் (அதிகம் 211, சராசரி 134.20, சதம்  3, அரை சதம் 2) குவித்து மிகச் சிறந்த பார்மில் உள்ளார். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையிலும் விராத் கோஹ்லியை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 அந்தஸ்தை மீண்டும் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், கடைசி டெஸ்டில் வென்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. அதே சமயம், இந்த போட்டியில் வெற்றியை வசப்படுத்தி தொடரை சமன் செய்ய இங்கிலாந்தும்  வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

மூலக்கதை