சில்லி பாயிண்ட்…

தினகரன்  தினகரன்
சில்லி பாயிண்ட்…

* பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னணி வீரர்கள் விலகிய நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியின் கேப்டனாக லாகிரு திரிமன்னே மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக தசுன்  ஷனகா நியமிக்கப்பட்டுள்ளனர்.* ஆஷஸ் தொடருக்கான ஆடுகளங்கள் திருப்தி அளிக்கவில்லை. இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் பிட்ச் அமைக்க தவறியது ஏமாற்றமளிக்கிறது என்று நட்சத்திர வேகம் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.* ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் இங்கிலாந்திடம் தோற்றதை இன்னும் எங்களால் மறக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அந்த நினைவு எங்களை வாட்டுகிறது என்று நியூசிலாந்து கேப்டன் கேன்  வில்லியம்சன் கூறியுள்ளார்.* டி20 போட்டிகளில் கிறிஸ் கேல் அடித்த 22வது சதம் இது. அடுத்த இடத்தில் உள்ள மைக்கேல் கிளிஞ்சர் 8 சதம் மட்டுமே அடித்துள்ளார். ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், லூக் ரைட், பிரெண்டன் மெக்கல்லம் தலா 7 சதம் விளாசி 3வது  இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.* செயிண்ட் கிட்ஸ் அணி 242 ரன் எடுத்து வென்றது, டி20 போட்டிகளில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. முன்னதாக, 2018ல் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து  வென்று முதலிடம் வகிக்கிறது.

மூலக்கதை