டிடிவி. கூடாரம் காலியாகி விடும்: ராஜேந்திரபாலாஜி ஆரூடம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிடிவி. கூடாரம் காலியாகி விடும்: ராஜேந்திரபாலாஜி ஆரூடம்

விருதுநகர்:டிடிவி கூடாரம் விரைவில் காலியாகிவிடும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகரில் நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் மூலம் ரூ. 8 ஆயிரத்து 830 கோடிக்கு 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இதன் மூலம் 37 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அமெரிக்க தொழிலதிபர்கள் விரைவில் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்து முதலீடு செய்ய உள்ளனர்.

சேலத்தில் அமெரிக்க நிறுவனத்தின் உதவியுடன் மிகப்பெரிய பால்பண்ணை, கால்நடை கல்லூரி, தீவன உற்பத்தி மற்றும் நவீன ரக பசுக்களுக்கான விந்து உற்பத்தி மையம் துவங்கப்படவுள்ளது. தமிழகத்தில் 25 மாவட்டங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய பால் பண்ணைகள் அமைக்கப்படும்.

விருதுநகர் மாவட்டம் ஆணையூரில் நறுமண பால் தொழிற்சாலை அமைய உள்ளது. திருவில்லிபுத்தூரில் கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அமமுக நிர்வாகி புகழேந்தி அந்த கட்சியை விட்டு வெளியேற உள்ளதால், டிடிவி தினகரனின் கூடாரம் விரைவில் காலியாகி விடும்.

இவ்வாறு கூறினார்.

.

மூலக்கதை