கடலூரில் கொசுமருந்து குடித்த 4 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடலூரில் கொசுமருந்து குடித்த 4 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

கடலூர்: குப்பையில் கிடந்த கொசுமருந்த குடித்து மயங்கிவிழுந்த 4 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடலூர் சிப்காட் அடுத்த நொச்சிக்காடு வள்ளலார் தெருவை சேர்ந்த மாயவேல் மகன் அமுதஇனியன் (3), தேவேந்திரன் மகன்கள் ரிஷிவேந்தன் (4), ஹரிதேவன் (2) மற்றும் அருள்ராஜ் மகன் தட்சன் (3).

இவர்கள் அனைவரும் வீட்டுத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, குப்பையில் கிடந்த கொசு விரட்டி பாட்டிலில் இருந்த திரவத்தை எடுத்துக் அனைவரும் குடித்துள்ளனர். இதன்பிறகு கொஞ்ச நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படவே  பெற்றோரிடம் வந்து தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், அவர்களை உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை