கால்வாயில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை பலாத்கார முயற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கால்வாயில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை பலாத்கார முயற்சி

ஆரல்வாய்மொழி: கால்வாயில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போதை ஆசாமி சிக்கினார். ஆரல்வாய்மொழி அவ்வையாரம்மன்கோயில் அருகே சந்தைவிளை சாலையில் கால்வாய் ஒன்று உள்ளது.

இந்த காவல்வாயில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் குளிப்பது, துணிகள் துவைப்பார்கள். கடந்த 6ம் தேதி காலை சுமார் 11 மணிக்கு தோப்பூர் கனகமூலம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 24 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவர் தனியாக குளித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலையா (40) கால்வாய் வழியாக வந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இளம் பெண் தனியாக குளித்துக் கொண்டு இருப்பதை பார்த்தவர் கால்வாய் கரையோரம் சென்றார். திடீரென இளம் பெண்ணின் ஆடைகளை பிடித்து இழுத்து கிழித்ததாக தெரிகிறது.

பின்னர் இளம் பெண்ணை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன இளம் பெண் பாலையாவை தள்ளிவிட்டு விட்டு கூச்சலிட்டவாறு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி இருக்கிறார்.

நேற்று அந்த பகுதியில் இளம் பெண் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த பாலையா இளம் பெண்ணை பார்த்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கி அருகில் சென்றார்.

பின்னர் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து சென்று உள்ளார். இதனால் பதறி போன இளம் பெண் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தினார்.

பின்னர் வீட்டில் இருந்த பாலையாவை கைது செய்தனர்.

.

மூலக்கதை