கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் அதிரடி உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கூடுவாஞ்சேரி  நெல்லிக்குப்பம் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் அதிரடி உத்தரவு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று திடீரென ஆய்வு செய்தார். இதில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள், தாம்பரம் புறவழிச்சாலை பணிகள், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையோரத்தில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஜெலட்சுமி நகர் பிரதான சாலையோரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் ஆய்வு செய்தார்.

இந்த அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலைகளை மேம்படுத்தவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டார்.

ஆய்வின்போது செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் செல்வம், வண்டலூர் டிஎஸ்பி வளவன், தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் மோகன், செங்கல்பட்டு நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சத்தியசீலன் உட்பட பலர் உடனிருந்தனர்.

.

மூலக்கதை