கலசப்பாக்கம் அருகே மழைபெய்ய ஒப்பாரி வழிபாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கலசப்பாக்கம் அருகே மழைபெய்ய ஒப்பாரி வழிபாடு

கலசப்பாக்கம்: மழைபெய்யவேண்டி கிரா மக்கள் ஒப்பாரிவைத்து வழிபாடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் வசித்துவரும் மக்கள், விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். இந்த பகுதியில் பருவமழை கைவிட்டதால் ஏரி, குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது.

முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையும் முற்றிலும் வறண்டுவிட்டது. இதனால் விவசாயம் முடங்கிபோனதால் வருமானம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராம மக்கள் மழைபெய்யவேண்டி அங்குள்ள ஏரிக்கு வந்தனர். பின்னர் பெண்கள் உள்பட அனைவரும் சேர்ந்து மழை வேண்டி பொங்கல் வைத்தனர்.

பின்னர் அனைவரும் ஒப்பாரி வைத்து வருண பகவானை வழிபட்டனர்.


.

மூலக்கதை