விநாயகர் சிலைகளை கரைத்தபோது ஏரியில் மூழ்கி 6 சிறுவர், சிறுமிகள் சாவு: கர்நாடகாவில் சோகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விநாயகர் சிலைகளை கரைத்தபோது ஏரியில் மூழ்கி 6 சிறுவர், சிறுமிகள் சாவு: கர்நாடகாவில் சோகம்

சித்தூர்: கர்நாடகா மாநிலத்தில் விநாயகர் சிலைகளை கரைத்தபோது ஏரியில் மூழ்கி சிறுவர், சிறுமிகள் 6 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், மரப்பக்கட்டா கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர்.

அந்த சிலைகளை கரைக்க கர்நாடகா-ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஏரியில் இறங்கி சிலையை கரைத்தபோது எதிர்பாராதவிதமாக 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மேலும் 3 சிறுவர்கள் நீரில் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றபோது அவர்களும் தண்ணீரில் சிக்கினர். அவர்களது சத்தம்கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர்.

பின்னர் அவர்களை மீட்க முயன்றனர். இருப்பினும் சிறுமிகள் தேஜ, ரஞ்சிதா, ரோகித் ஆகியோர்  நீரில் மூழ்கி இறந்தனர்.

தனுஷ், வீணா, வைஷ்ணவி ஆகிய 3 பேரை மீட்டு, வி. கோட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த 6 பேரும் 4 குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கர்நாடக மற்றும் ஆந்திர போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

.

மூலக்கதை