விஜய் படம்: ரமணா மறுப்பு

தினமலர்  தினமலர்
விஜய் படம்: ரமணா மறுப்பு

விஜய் நடித்த திருமலை, ஆதி போன்ற படங்களை இயக்கியவர் ரமணா. தனுஷ் நடித்த சுள்ளான் படத்தையும் இயக்கினார். புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ரமணா, அதற்கான சிகிச்சை எடுத்து தற்போது மீண்டு வருகிறார். அதோடு மீண்டும் படம் இயக்குவதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் விஜய்யை வைத்து ரமணா படம் இயக்குவதாக செய்தி வெளியானது. இதை ரமணா மறுத்துள்ளார். ‛‛யாரிடமும் விஜய் படத்தை இயக்கப் போவதாக நான் சொன்னதில்லை. இருப்பினும் இப்படியொரு தவறான செய்தி பரவி இருக்கிறது. இதுபோன்ற செய்தியை வெளியிட்டு விஜய்யை தர்மசங்கடத்தில் ஆழ்த்த ஒருபோதும் நான் நினைத்ததில்லை'' என்று கூறியிருக்கிறார் ரமணா.

மூலக்கதை