தர்பார் செகண்ட் லுக் வெளியீடு

தினமலர்  தினமலர்
தர்பார் செகண்ட் லுக் வெளியீடு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடித்து வரும் தர்பார் படத்தின் செகண்ட் லுக் இன்று(செப்.,11) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று (செப்., 11) மாலை 6 மணிக்கு இரண்டாவது போஸ்டர் வெளியிட்டனர். இதில் ரஜினி, பனியனுடன் மாஸாக இருப்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதனை டுவிட்டரில் '#DarbarSecondLook' என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மூலக்கதை