காஷ்மீர் விவகாரம்: தலையிட ஐநா மீண்டும் மறுப்பு

தினமலர்  தினமலர்
காஷ்மீர் விவகாரம்: தலையிட ஐநா மீண்டும் மறுப்பு

நியூயார்க்: காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது என மறுத்துள்ள ஐ.நா., இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

ஜெனிவாவில் நடந்த ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 42வது கூட்டத்தின் போது பேசிய ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளின் மீதும் அக்கறை உள்ளது. இரு நாடுகளும் இவ்விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இது தொடர்பாக ஐ.நா., தலைமை செய்திதொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், ஐநா பொதுச் செயலாளரின் தகவல் அனைவருக்கும் பொதுவானது. பொதுவாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ தற்போதை நிலை குறித்து இந்தியாவும் பாக்.,ம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காரண வேண்டும். சமீபத்தில் நடந்த ஜி7 மாநாட்டின் போது இந்தியா மற்றும் பாக்., பிரதமர் என்னை சந்தித்து, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.


தற்போதைய நிலை, எங்களின் நிலை, மத்தியஸ்தம் குறித்து நீங்கள் நன்கு அறிவீர்கள்.இதில் எங்களின் நிலைப்பாடு ஒன்று தான். ஏற்கனவே கூறியது போல் சிம்லா ஒப்பந்தத்தின்படி, அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும். மனித உரிமைகளுக்கு முழு மரியாதை கொடுத்தால் மட்டுமே காஷ்மீர் சூழலுக்கு தீர்வு காண முடியும் என்றார். காஷ்மீர் விவகாரத்தில் ஐநா தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என ஐ.நா.,விடம் பாக்., இருமுறை முறையிட்டு இருந்தது.

மூலக்கதை