கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் காவிரி நீரின் அளவு பாதியாக குறைப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் காவிரி நீரின் அளவு பாதியாக குறைப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் காவிரி நீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. காலையில் 53,600 கனஅடி தண்ணீர் திறந்துவிடபட்ட நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 25,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 20,000 கனஅடி நீரும் கபினியில் இருந்து 5,000 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைத்துள்ளது.

மூலக்கதை