வாய் பேச முடியாத அனுஷ்கா

தினமலர்  தினமலர்
வாய் பேச முடியாத அனுஷ்கா

‛பாகமதி' படத்திற்கு பின் உடல் எடை அதிகரித்ததால் படங்களில் நடிப்பதை தவிர்த்தார் அனுஷ்கா. பின் பிட்னஸ் ஒருவரின் உதவியோடு எடை குறைப்பில் இறங்கியவர், ஓரளவுக்கு ஸ்லிம்மாகி ‛சைலன்ஸ்' என்ற படத்தில் நடித்தார்.

ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படத்தில் அனுஷ்கா உடன் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 4 மொழிகளில் தயாராகும் படம். தமிழில் ‛நிசப்தம்' என்றும், மற்ற மொழிகளில் ‛சைலன்ஸ்' எனவும் பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

சாக்ஷி எனும் பாத்திரத்தில் வாய் பேச முடியாத ஓவிய பெண்மணியாக நடித்திருக்கிறார் அனுஷ்கா.

மூலக்கதை