அருண் விஜய்யின் புதிய படம் துவங்கியது

தினமலர்  தினமலர்
அருண் விஜய்யின் புதிய படம் துவங்கியது

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா ஆகிய படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமரவேலன். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(செப்.,11) காலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. மற்ற நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார். ஸ்டன்ட் சில்வா சண்டை பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

அருண் விஜய் - ஜி.என்.ஆர்.குமரவேலன் இணையும் இப்படம் ஆக்ஷன் கலந்த காதல் படமாக இருக்கும் என தெரிகிறது. அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் சாஹோ. அதில் அவர் பிரபாஸின் நண்பராக நடித்திருந்தார். பாக்ஸர், மாபியா ஆகிய படங்களில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.

மூலக்கதை