வெளிநாடுகளில் இலங்கையின் பலசரக்கு விற்பனை நிலையம் ஆரம்பித்து வைப்பு!

TAMIL CNN  TAMIL CNN
வெளிநாடுகளில் இலங்கையின் பலசரக்கு விற்பனை நிலையம் ஆரம்பித்து வைப்பு!

வெளிநாடுகளில் இலங்கையின் பலசரக்கு விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை பலசரக்குப் பொருட்களை சர்வதேச சந்தையில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதலாவது மத்திய நிலையம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இலங்கை உணவுப் பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். The post வெளிநாடுகளில் இலங்கையின் பலசரக்கு விற்பனை நிலையம் ஆரம்பித்து வைப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை