தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு: சவரனுக்கு ரூ.120 குறைந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு: சவரனுக்கு ரூ.120 குறைந்தது

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.

மேலும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா-சீனா இடையே நடந்த வர்த்தகப் போரால், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

40 நாட்களில் ரூ. 3500க்கு மேல் உயர்ந்தது. ஆனால் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானதால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ளது.

ரூ. 30 ஆயிரத்தை கடந்த தங்கம் தற்போது ரூ. 29 ஆயிரத்தை விட குறைவாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று காலையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 3645 சவரனுக்கு ரூ. 29,160க்கு விற்பனையானது. மாலையில் கிராமுக்கு ரூ. 4 உயர்ந்தது.

இதனால் சவரன் ரூ. 29,192க்கு விற்பனையானது. இந்தநிலையில் இன்று காலையில் தங்கத்தின் விலை குறைந்தது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 3634க்கு விற்பனையானது. இதனால் நேற்று மாலையில் விற்பனையான தங்கத்தை விட கிராமுக்கு ரூ. 15 குறைந்தது.

சவரன் ரூ. 29 ஆயிரத்து 72க்கு விற்பனையானது.

தொடர்ந்து தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை