குற்றாலம் அருவியில் கொட்டுது தண்ணீர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குற்றாலம் அருவியில் கொட்டுது தண்ணீர்

தென்காசி: குற்றாலத்தில் தொடர்ந்து சில தினங்களாக சாரல் இல்லாத நிலையிலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. குற்றாலத்தில் சீசன் காலம் நிறைவடைந்த பிறகு செப்டம்பர் மாதத்திலும் சாரல் நன்றாக பெய்து வந்த நிலையில் கடந்த 3 தினங்களாக சாரல் இல்லை.

வெயில் காணப்படுகிறது. இன்று காலையிலும் சாரல் இல்லை.

தொடர்ந்து சாரல் இல்லாத நிலையிலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது.

ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

அருவிகளில் தண்ணீர் விழுந்த போதிலும் சீசன் காலம் நிறைவடைந்து விட்டதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

.

மூலக்கதை